தாய் கண் முன்னே நடந்த விபரீதம்.. நீரில் மூழ்கி மூச்சை இழந்த மகன்.. கன்னியாகுமரியில் சோகம்
கன்னியாகுமரியில், குளத்தில் குளிக்கும்போது தாயின் கண்முன்னே இளைஞர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரணியல் அருகே புதுகுளத்தன்கரை பகுதியை சேர்ந்த விஜயலக்ஷ்மி என்பவரின் மகன் ராமகிருஷ்ண பிரசாத், வீட்டின் முன்பு உள்ள புதுகுளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கனமழை வெள்ளத்தால் குளத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தண்ணீர் இருந்ததால், ராமகிருஷ்ணபிரசாத் திடீரென தத்தளித்தவாறே குளத்தில் மூழ்கி உள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் கூச்சலிட்டார். பின்னர் தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள், குளத்தில் மூழ்கி இருந்த ராமகிருஷ்ண பிரசாத்தின் உடலைக் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story