தாலியை பிடுங்கிய காதல் கணவன்.. விரக்தியில் பெண் எடுத்த அவசர முடிவு

x

விருதுநகர் மாவட்டம் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 15ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சசிக்குமாரின் பெற்றோர் இறந்த நிலையில், அவர்கள் தனது சித்தி வீட்டில் தங்க வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் வீட்டில் சேர்த்துக் கொண்ட சசிக்குமாரின் சித்தி மாரியம்மாள், மறுநாள் காலையில் மாரீஸ்வரியின் தாலியை பிடிங்கி கொண்டு வெளியே விரட்டியுள்ளார். சித்தி உடன் சேர்ந்து கணவரும் வீட்டை விட்டு வெளியே விரட்டியதால் மனம் உடைந்த மாரீஸ்வரி, எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்