சென்னையை கலக்கிய காதல் ஜோடி... செல்போன் கடைகளை குறிவைத்து மோசடி...
- கொள்ளையடிப்பதிலேயே காதலராக மாறி... பின் ஜோடியாக சேர்ந்து திருடும் காட்சிகளை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் பார்த்திருப்போம்.
- கிட்டத்தட்ட இந்த படத்தில் வருவது போலவே காதலனோடு சேர்ந்து கொள்ளையடித்து வந்த பலே பெண்மணி இவர்தான்.
- ஒரு பக்கம் கைது... மற்றொரு பக்கம் காதலனின் துரோகம் என ஒரே இரவில் வாழ்க்கை தலை கீழாக மாறியதால் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கும் இவரை பார்த்தால் அப்பாவி போல இருக்கலாம். ஆனால் ஒரே ஸ்கிரீன் ஷாட்டை வைத்துக் கொண்டு பல கடைகளில் கல்லா பெட்டியை காலி செய்த தில்லாலங்கடி.
- சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் பதிவான இந்த காட்சிகள் தான் அம்மனியின் ஃபிளாஸ்பேக்கிற்கு ஆதாரம். காலியாக இருந்த கடைக்குள் மண்டை மேல் இருக்கும் ஹெல்மெட்டைக் கூட கழட்டாமல் , ஜீன்ஸ் ஃபேன்ட், டாப்போடு உள்ளே நுழைந்திருக்கிறார் ஒரு பெண்.
- அவசரமாக தனக்கு தெரிந்தவருக்கு 15 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டுமென கடைகாரரிடம் கேட்டிருக்கிறார். அவரும் அந்த பெண் கொடுத்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.
- அப்போது கடைகாரரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த பெண் கடைக்காரருக்கு கையில் பணமாக கொடுக்காமல் , பேடிஎம் -மில் ஸ்கேன் செய்து விட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்திருக்கிறார்.
- ஆனால் பணம் வந்ததா என கடைகாரர் சரி பார்பதற்குள் கதவை தள்ளிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்திருக்கிறார்.
- இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர் வெளியே சென்று பார்த்த போது அந்த பெண் ஒரு பைக்கில் ஏறி தப்பித்துச் சென்றிருக்கிறார்.
- இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்குபதிவு செய்த போலீசார், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த போது, அந்த ஜோடி பைக்கில் வரும் போதே கடையை நோட்டமிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
- எனவே இது திட்டமிட்ட கொள்ளை கும்பல் என்பதை தெரிந்து கொண்ட போலீசார் , அந்த திருட்டு ஜோடியை வலைவீசி தேடி வந்தனர்.
- இந்த நிலையில் தான் அதே பாணியில் மற்றொரு கடையில் திருட நினைத்த போது தான் இவர் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அந்த மார்டன் மங்கையை காவல் நிலையத்திற்கு தூக்கி வந்து விசாரித்த போது தான் அத்தனை உண்மைகளையும் கக்கி இருக்கிறார்.
- இந்த பலே திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷெரில் கொன்சால்வேஸும் அவரது காதலனும் தான்.
- தற்போது ஊரப்பாக்கத்தில் தனது சகோதரனோடு தங்கி இருக்கும் ஷெரில், திருடுவதையே முழு நேர தொழிலாக செய்துவருபவர். ஏற்கனவே சேலத்தில் மோசடி செய்து சிறைக்குச் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் தலை நகரத்திற்கு
- வந்த ஷெரில் தனது காதலனோடு சேர்ந்து தம்பரம் சுற்று வட்டார பகுதிகளை குறி வைத்திருக்கிறார்.
- தனது காதலனோடு பைக்கில் சென்று கடைகளை நோட்டமிட்டு வந்த இருவரும் கலியாக இருக்கும் கடைகளை பார்த்தவுடன் பைக்கை பார்க் செய்து விடுவார்கள்.
- காதலனை வெளியே தயாராக இருக்கச் சொல்லி விட்டு கடைக்குள் செல்லும் ஷெரில் மணி ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டுமென, தன்னுடைய வங்கிக் கணக்கை கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்வார் .
- அதன் பிறகு கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பி விட்டது போல போலியான ஒரு ஸ்கிரின்ஷாட்டை கடைகாரரிடம் காட்டிவிட்டு தப்பித்து ஓடிவிடுவார்.
- இதே பாணியில் தான் தாம்பரத்தில் பல கடைகளில் கைவரிசை காட்டி வந்திருக்கிறது இந்த ஜோடி.
- இந்த நிலையில் தான் சம்பவத்தன்றும் ஒரு கடைக்குள் நுழைந்த ஷெரில் வேலையை முடித்துக் கொண்டு எஸ்கேப் ஆக நினைத்த போது சுத்துப் போட்டிருக்கிறார்கள்.
- இதனை பார்த்த அவரது காதலன் ஒரே முறுக்காக ஆக்ஸ்லேட்டரை திருகிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.
- ஷெரிலை மட்டும் சோலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
- இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஷெரிலை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, தப்பி ஓடிய ஜோடி புறாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஷெரிலை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, தப்பி ஓடிய அவரது காதலனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story