தேர்தலில் நடந்த தள்ளுமுள்ளு...திடீரென நடந்த அந்த ஒரு சம்பவம் | Vellore | Fight
வேலூர் மாவட்டம் பேராணம்பட்டு நகர வக்பு வாரிய தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலின் போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து, 70 க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வரும் 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
Next Story