இறங்கிய வேகத்தில் எகிறிய தக்காளி விலை
இறங்கிய வேகத்தில் எகிறிய தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்..நேற்று மொத்த விற்பனையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நாட்டுத் தக்காளி இன்று 10 ரூபாய் விலை அதிகரித்து 60 ரூபாய்க்கும், நவீன் தக்காளியும் 10 ரூபாய் விலை அதிகரித்து 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதர பச்சைக் காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 45 ரூபாய்க்கும், பீன்ஸ் 35 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 40 ரூபாய்க்கும், வெண்டை, முருங்கை, காலிபிளவர் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், பட்டாணி விலை 150 ரூபாயாகவும், பூண்டு விலை 190 ரூபாயாகவும், இஞ்சி விலை 200 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story