தஞ்சை குளத்துக்கு நேர்ந்த அவல நிலை | thanjavur
தஞ்சை குளத்துக்கு நேர்ந்த அவல நிலை
மன்னர் காலத்து தஞ்சை அய்யன் குளத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மையத்தில் மேல வீதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட அய்யன் குளமானது மன்னர் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது... 2021ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இக்குளம் தூர்வாரப்பட்டது. குளத்திற்கு தண்ணீர் வர வழிவகை செய்யப்பட்டதுடன், பொதுமக்கள் செல்லும் நடைபாதை பக்கவாட்டு சுவற்றில் ஓவியங்கள், 64 வகையான ஆயக் கலைகள், ஐவகை நிலங்கள், நவரத்தினங்கள், 16 செல்வங்கள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டு பதாகைகளாக காட்சிப்படுத்தப்பட்டன. மழைநீர் சேகரிப்பால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நடைபயிற்சி செல்வோரின் உடல் நலன் மேம்படுவது மட்டுமன்றி அறிவும் மேம்பட்டது. ஆனால், ஆயக் கலைகள் குறித்த பதாகைகள் கிழிந்து காணப்படுவதுடன், குளம் குப்பை கூளமாகக் கிடக்கின்றது. இதையடுத்து அய்யன் குளத்தைத் தூர்வாறி பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.