வீட்டை தீ வைத்து எரித்த நபர்... ஆட்சியரின் முன்பு அமர்ந்து தம்பதி போராட்டம்.. சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கையில், தங்கள் வீட்டை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரின் காரின் முன்பு தம்பதியர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி செஞ்சை ஊரணியைச் சேர்ந்த சரவணன், பிரியா தம்பதியர், குடிசை வீடு கட்டி வசித்து வந்த நிலையில், அந்த இடத்துக்கு உரிமை கோரி, அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி, ரேவதி தம்பதியர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தங்களின் குடிசைக்கு தீ வைத்தாக கூறி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் அவர்கள் கதறி அழுதனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், இருவரையும் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
Next Story