அசிங்கமாக பேசிய ஊராட்சிமன்ற தலைவர்...ஆத்திரத்தில் பணியாளர்கள் போராட்டம் | Tamilnadu | Protest
வேதாராண்யம் அருகே, தரக்குறைவாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலைப் பணியாளர்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குரவப்புலத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு பள்ளம் தோண்டுவதில், ஊராட்சி மன்றத் தலைவர் சரவணனுக்கும், நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, சரவணன் மீது ரவிச்சந்திரன், வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக, நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story