எதிர்க்கட்சிகளுக்கு அது தெரியாது..! "குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு உரிமைத்தொகை" - அமைச்சர் கீதாஜீவன்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய வதந்தியை பயனாளிகள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படும் முகாம்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 563 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் 80 சதவீத பணிகள் நிறைவடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தார்.
Next Story