தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி..காலையிலேயே வந்த துக்க செய்தி"என்ன பண்ணப்போறோம்னு தெரில"Bondamani
சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டாமணி...இலங்கையில் இருந்து சென்னை வந்த போண்டா மணி, 1991ம் ஆண்டு பவுனு பவுனுதான் என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அமைச்சர் மா.சுப்ரமணியன் மேற்பார்வையில் முறையான சிகிச்சையும் பிரபலங்களின் பண உதவிகளும் கிடைக்கப் பெற்றது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பிய அவர் ழக்கம் போல படங்களிலும் நடிக்க தொடங்கினார்... 65 வயதான போண்டாமணி கடந்த ஒரு வருடமாக வாரத்திற்கு 2 நாட்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் மட்டும் செய்து கொண்டே, படங்களிலும் நடித்து வந்துள்ளார்... நேற்று காலை டயாலிசிஸ் செய்து விட்டு வீடு திரும்பிய போண்டாமணி இரவு பத்தரை மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்... சென்னை பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு 1 மகனும் மகளும் உள்ளனர்... நாகல் கேணியில் மாலை 4 மணிக்கு உடல் தகனம் செய்யப்படுவதாக போண்டாமணியின் மகன் தெரிவித்தார்...