உணவை வைத்து மாணவி துன்புறுத்தப்பட்ட விவகாரம்.. பறந்த உத்தரவு... ஆட்சியர் அதிரடி

x

கோவை, துடியலூரிலுள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், அப்பள்ளி ஆசிரியர் ராஜ்குமார், பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். மாணவி மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆசிரியர்கள் கேலி செய்து சர்ச்சைகுரிய வகையில் பேசியவதாகவும், மாணவியின் பர்தாவால் தங்களின் காலணிகளை ஆசிரியர்கள் துடைக்க சொன்னதாகவும் குற்றச்சாட்டினார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணை அறிக்கையை கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இதனிடையே, மாணவியின் தரப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலருடன் இணைந்து வட்டாட்சியரையும் நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பயிற்சி ஆசிரியை அபிநயா வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்