"அப்பா இறந்த அடுத்த நாளே போட்டி..."உருகி உருகி பேசிய தமிழக வீரர்

x

கேலோ இந்தியா போட்டிகளில், ஆண்கள் வாலிபால் பிரிவில் தங்கப் பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலமும் வென்று தமிழக அணியினர் அசத்தினர்.சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. மகளிர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணி குஜராத்தை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. மேற்கு வங்கம் தங்கப் பதக்கத்தையும், ராஜஸ்தான் வெள்ளி பதக்கத்தையும் தட்டிச்சென்றன. ஆடவர் வாலிபால் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - அரியானா அணிகள் மோதின. இதில், 3க்கு 1 என்ற என்ற செட் கணக்கில் அரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஹரியானா அணி வெள்ளி பதக்கத்தையும், ஆந்திர பிரதேசம் அணி வெண்கல பதக்கத்தையும் வென்றன. இதனையடுத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்உக பதக்கங்களும், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன. இறுதிப்போட்டியில் வென்ற பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வீரர் பரத், போட்டி தொடங்குவதற்கு முன்பு தனது தந்தை இறந்து விட்டதாகவும், அடுத்த நாளே போட்டியில் பங்கேற்று, அவரது ஆசையை நிறைவேற்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்