ஓனருக்கே விபூதி அடித்த பணிப்பெண் - திருடனை தேடும்போது சிக்கிய திருடி
சென்னை அடையாறில் அமைந்துள்ள கிரண்ட் பிளாசா ஹோட்டலின் உரிமையாளரின் தாய் கீதா கோயல். இவர் அபிராமபுரத்தில் தனி வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி அதிகாலை அவர் உறங்கிக்கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றதை கண்டு கூச்சலிட்டுள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், வீட்டுப்பணிப்பெண் மர்ம நபருக்கு கதவை திறந்து விடுவதை சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் கண்டறிந்தனர். விசாரணையில் கடன் தொல்லையால் தனது சிறுவயது நண்பருடன் சேர்ந்து பணிப்பெண் சிறுக சிறுக கொள்ளையடித்ததும், நகைகளை 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Next Story