பிரபல எழுத்தாளர் வீட்டில் 28 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் | Theft

x

சென்னை கேகே நகர் 15வது செக்டார் பகுதியில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகனான அலோசியஸ் ஜோசப். இவரது வீட்டில் இருந்த 28 சவரன் தங்க நகையை காணவில்லை என வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். வீட்டில் 4 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருக்கும் சுமித்ரா என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பணிப்பெண் சுமித்ராவை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுக சிறுக வீட்டில் இருந்து 28 சவரன் நகையை திருடியதாகவும், தற்போது 20 சவரன் நகையை மட்டும் வைத்துள்ளதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாக சொல்லப்படுகிறது. அந்த நகைகளை மீட்ட போலீசார், சுமித்ரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ராய் தங்க நகை மற்றும் பணம் திருடுபோன சம்பவத்தில், வீட்டில் பணிபுரிந்த பெண் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்