"கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டா செல்லாது.." கண்ணீரோடு திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது என்றதால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சிக்குட்பட்ட 18-வார்டுகளில் 20-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆட்சியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனை பட்டா செல்லாது என்ற தகவல் பரவியதால், கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாசில்தார் ராஜா என்பவர், பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story