யாருமில்ல நேரம் வீட்டில் புகுந்து சிறுமியை சீரழித்த காம கொடூரன் - வீடியோவை லீக் செய்ததால் அதிர்ச்சி

x

தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பாலக்காடு அருகேயுள்ள சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இன்பசேகரன். இவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர், போலீசில் புகாரளித்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், இளைஞரை போக்சோவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்