பல உயிர்களுக்கு ஒளியேற்றிய தீபம்..மறைந்தும் மறையாதவருக்கு கிடைத்த மரியாதை..நேரில் வந்த அரசியல்

x

கீழ்குளத்தைச் சேர்ந்த 26 வயது செல்வின் சேகர் உடல் நலக் குறைவால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்ய செல்வின் சேகரின் மனைவி கீதா ஒப்புக் கொண்ட நிலையில், அவரின் உடல் பாகங்கள் பல்வேறு நபர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளன. குறிப்பாக செல்வினின் இதயம் 16 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இந்த நிலையில் செல்வின் சேகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சொந்த ஊரான குமரி கீழ்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கபட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்பநாபபுரம் சார் ஆட்சியர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இன்று அவரது உடலுக்கு குமரி எம்பி விஜய்வசந்த், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அப்பகுதி பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் கீழ்குளம் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்