இரு ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம்..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட சதீஷ், முத்து சரவணன் ஆகியோர் சோழவரம் அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுட்ண்டர் சம்பவத்தில் சந்தேகம் உள்ளதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என, முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்