மருத்துவர்,நோயாளி மோதல் விவகாரம்... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ... | Vellore | Hospital Fight

x

வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் மருத்துவர் மோதிக் கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நோயாளி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகியோர் மருத்துவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், திவாகர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நோயாளியான சுபார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் தன்னை அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை தாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்