ஒன்றும் அறியாமல் காலை விட்ட அப்பாவி பாட்டி... உள்ளே இழுத்து உயிரை பறித்த குழி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், கவுண்டன்யா ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிக்காக, அருகே தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மூதாட்டி ஒருவர் குழியில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இறந்த மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story