தி.மலை மகா தீபத்தை காண சென்ற 20 பக்தர்களுக்கு நடந்த அசம்பாவிதம்..பரபரப்பு காட்சிகள்

x

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையேறி மகாதீபத்தைக் காண 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், டோக்கன் பெற முண்டியடித்த கூட்டதால் சுவர் இடிந்து விழுந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னுரிமை அடிப்படையில் 2 ஆயிரத்து 500 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.. சீட்டு பெற காத்திருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களை காவல்துறையினர் வெளியே அனுப்ப முயன்ற நிலையில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக கூடியதால் அரசு கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்