தாய், மகன் அரங்கேற்றிய சம்பவம் - போலீசார் அதிரடி..சென்னையில் பரபரப்பு
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 வீடுகளை அபகரித்ததாக தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சுமி பாய் மற்றும் பத்மா பாய் ஆகியோருக்கு சொந்தமான 2 வீடுகள் சென்னை சிந்தாதரிப்பேட்டை காக்ஸ் தெருவில் உள்ளன. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் 3 பேர் அபகரித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டை அபகரித்த தாய்- மகனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story