"அவர நான் தான் போட்டேன்".. மனைவியிடம் கெத்தாக சொன்ன கணவன் - ஒட்டு கேட்டு கொத்தாக தூக்கிய போலீஸ்..!

x

இடப் பிரச்சினை காரணமாக தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகனை,போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த 69 வயதான ராமு என்பவர், கடந்த 24-ம் தேதி

வீட்டின் அருகில் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இது குறித்த குடும்பத்தினர் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். விசாரணையில் இறங்கிய போலீசார், இறந்தவரது குடும்பத்தினரின் செல்போன் எண்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது உயிரிழந்த ராமுவின் மகன் புருஷோத்தமன்,

எனது தந்தையை நான் தான் அடித்து கொன்றேன் என்று மனைவியிடம் பேசிய 20 நிமிட ஆடியோ போலீசாரிடம் சிக்கியது. இதையடுத்து புருஷோத்தமனை போலசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் தந்தையை அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தந்தையை கொலை செய்துவிட்டு வேறு யாரோ அடித்துக் கொன்று விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்ததால், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்