தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவர்..காதலனுடன் சேர்ந்து அடித்தே கொன்ற மனைவி...

x

கிருஷ்ணகிரி அடுத்த கள்ளநாயக்கன்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் விவசாய கிணற்றில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, உயிரிழந்தவர் ஆத்துகாவாய் என்னும் இடத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ் என தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார், மைக்கேல்ராஜின் 28 வயதான மனைவி ஜோஸ்பின் சிந்துவிடம் விசாரித்தபோது அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கல்குவாரியில் மைக்கேல் ராஜ் உடன் பணியாற்றிய 19 வயதான விக்ரம் என்ற இளைஞருக்கும், ஜோஸ்பின் சிந்துவிற்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மைக்கேல்ராஜ்க்கு தெரியவர, இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், விக்ரமும், ஜோஸ்பின் சிந்துவும் திட்டமிட்டு, மைக்கேல்ராஜை வீட்டிலேயே வைத்து அடித்துக் கொன்றனர். பின்னர், உடலை கல்லில் கட்டி, கள்ளநாயக்கன் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதாக ஜோஸ்பின் சிந்து வாக்குமூலம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்