6 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய மருத்துவமனை..தவறான சிகிச்சையால் அரங்கேறிய சோகம்

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கண்மணி குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 6 மகள் ஷிவானி, காய்ச்சலுக்காக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையினால் தான் தனது மகள் உயிரிழந்ததாக, ஷிவானியின் தந்தை முருகேசன் போலீசாரிடம் புகாரளித்தார். இந்நிலையில் நெல்லை ஆட்சியரின் உத்தரவின் பேரில், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லதா தலைமையிலான குழுவினர், தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஷிவானிக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அந்த மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சை அளிப்பதற்கு தடை விதித்த மருத்துவ பணிகள் இணை இயக்குனர், அதற்கான உரிமத்தையும் ரத்து செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்