நொடியில் சாலையில் நடந்த பயங்கரம் - துடிதுடித்து பிரிந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உயிர்

x

கோவையில், அதிவேகமாக சென்ற கார் சாலை தடுப்பில் மோதிய விபத்தில், மருத்துவக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காளப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள் 7 பேர் இரவு மது அருந்திவிட்டு, காரில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர், தாங்கள் தங்கியிருந்த அறைக்கு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனிலும், இருகே உள்ள மரத்தின் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த மாணவர் ஸ்ரீமதன் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்