நெல்லையை புரட்டிபோட்ட கனமழை..வீணான புதிய வகை துணிகள் .."ஆத்துல தான் போட முடியும்..."

x

நெல்லையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் ஜவுளிக்கடைகளில் உள்ள துணிகள் பாதிப்படைந்த நிலையில், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நெல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால், பெரியார் பேருந்து நிலையத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் வெள்ளநீர் புகுந்து ஏராளமான புதுவகையான துணிகள் வீணாகியுள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை தினங்களை முன்னிட்டு ஏராளமான புதுத்துணிகளை கொள்முதல் செய்து வைத்திருந்த நிலையில், அனைத்தும் வெள்ளநீரில் வீணானதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜவுளிக்கடை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், தங்களால் சம்பளமும் கேட்க முடியவில்லை எனவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்