விட்டு வெளுத்தெடுத்த கனமழை.. கூலான தமிழகம்.. குஷியில் விவசாயிகள் | TN Rain

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மிதமான மழையினால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரத்தில் சாலைக்கிராமம், சூராணம், நகரகுடி, முனைவென்றி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள சில பகுதிகளில் மாலை முதல் மூன்றாவது நாளாக விட்டு விட்டு மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்த‌து. குறிப்பாக அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்