6 வயதில் காணாமல் போன சிறுமி..!12 ஆண்டுகளுக்கு பின்..! திருவண்ணாமலையில் நெகிழ்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த ஏழுமலை-சின்னபாப்பா தம்பதியினரின் 6 வயது மகள்

ப்ரியா 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த இருந்தார். இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள்

நடத்திய விசாரணையில் சோளிங்கர் காப்பகத்தில் இருந்த சிறுமியை, கடந்த 2020 ம் ஆண்டு வேலூர் காப்பகத்தில் சேர்த்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே சோளிங்கர் காப்பக உரிமையாளர் ப்ரியா தன்னுடைய மகள் என உரிமை கோரினார். ஒரு குழந்தைக்கு இரு தந்தைகள் உரிமை கோரியதால் , இருவருக்கும் டிஎன் ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஏழுமலையின் மகள் தான் ப்ரியா என்பது உறுதியானதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் பிரியா அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்