நடு ரோட்டில் வழிமறித்து VAOவை விரட்டி விரட்டி கட்டையால் அடித்த கும்பல்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை இருவர் வழிமறித்து கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் அருகேயுள்ள அய்யாபட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. 56 வயதான இவர் சிராவயல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். சிராவயல் குப்பைமேடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவரை, இருவர் வழிமறித்து கட்டையால் தாக்கியுள்ளனர். துரத்தி, துரத்தி தாக்கியதில் படுகாயமடைந்த பிச்சை முத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story