புரண்டு வந்த வெள்ளம்.. அவசரமாய் பாலம் மேல் வந்து பள்ளத்தில் விழுந்த பைக்..விழுப்புரத்தில் பயங்கரம்
மரக்காணம் அருகே தரைப்பால பள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டியை பொதுமக்கள் மீட்டனர்.
தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஓங்குர் ஆற்றுத்தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் காணிமேடு, மண்டகப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிப்படைந்த நிலையில், கிராமங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதன் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி அதில் விழுந்தார். பள்ளத்தில் விழுந்த நபர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தை மீட்டார்.
Next Story