20 நாள் வேதனை - ஒரே நொடியில் தீர்த்து வைத்த தீயணைப்பு துறை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில், கடந்த 20 நாட்களாக கழுத்தில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்தின் வளையத்துடன் தெருநாய் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, சுமார் அரைமணி நேரம் போராடி நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் குடத்தின் வளையத்தை அகற்றினர். இதையடுத்து 20 நாட்களாக வேதனையுடன் சுற்றித்திரிந்த நாய், மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்து ஓடியது.
Next Story