அபராதம் மட்டும் ரூ.66கோடி..கேரளாவை அதிரவைத்த கடத்தல் வழக்கு..நீதிமன்றம் போட்ட அதிர்ச்சி உத்தரவு
- திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அரங்கேறிய தங்க கடத்தல் வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான சிவசங்கர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிவசங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இருவரும் ஜாமின் பெற்று வெளியில் இருக்கும் நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிவசங்கர் உட்பட 44 பேருக்கு சுமார் 66 கோடி ரூபாய் அபராதம் விதித்து கொச்சி சுங்கத் தடுப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
- இதில், ஸ்வப்னா சுரேஷிக்கு 6 கோடியும், சிவசங்கருக்கு 50 லட்ச ரூபாயும் விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்த உத்தரவை எதிர்த்து சுங்க மற்றும் சேவை வரி மேல்மூறையீட்டு தீர்ப்பாயத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story