மலையில் மாஸ் காட்ட நினைத்த இளைஞர்..."அந்த" மோகத்தால் நேர்ந்த கதி
மலையில் மாஸ் காட்ட நினைத்த இளைஞர்..."அந்த" மோகத்தால் நேர்ந்த கதி - பதற்றத்தில் தேடிய நண்பர்கள்.. காத்திருந்த ஷாக்
கிருஷ்ணகிரியில், கோயில் பின்புறமுள்ள மலையில் ஏறி, செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அமித்குமார்,
கிருஷ்ணகிரியில் தங்கி, பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, கோயில் பின்புறம் உள்ள மலையில் ஏறினார். அங்கு செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்தார்.
இதில், அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, மொபைலும் உடைந்தது. அமித்குமாரை அவரது நண்பர்கள் தேடியபோது, மலை மீது ஏறியபோது தவறி விழுந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். செங்குத்தான பகுதியில் 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை, ஸ்ட்ரக்சரின் நான்கு புறத்திலும் கயிறு கட்டி தூக்கி மீட்டு , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.