விவசாயி கழுத்தில் கொடூரமா கத்திக்குத்து.. இரு பிரிவினருக்கு முட்டிய பயங்கர சண்டை - விருதுநகரில் உச்ச கட்ட பரபரப்பு
சாத்தூர் அருகே விவசாயி கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் உருவானதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார். அதே ஊரை சேர்ந்த இளைஞர் கண்ணன். நேற்று இரவு சதீஷ்குமார் அங்குள்ள பஞ்சர் ஒட்டும் கடையில் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த கண்ணன், சதீஷ்குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரின் கழுத்தில் குத்திவிட்டு, அவருடைய மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி உள்ளார்.
கத்திக்குத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சதீஷ்குமார் கத்தியால் குத்தப்பட்ட தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் கத்தியால் குத்திய கண்ணனின் வீட்டை கற்களால் சேதப்படுத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவானதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கண்ணனை இருக்கன்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.