கண்ணீர் விட்டு கதறிய யானைப் பாகன்..செல்ஃபி எடுத்த பொதுமக்கள்
மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
மக்தூம் ஞானியார் தர்காவில், பல ஆண்டுகளாக பள்ளிவாசலுக்குச் சொந்தமாக யானை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான உரிமம் பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குழு, யானையை பார்வையிட்டு, திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து, 58 வயதாகும் யானையை வனத்துறையினர் மீட்டு திருச்சியில் உள்ள யானை முகாமிற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், யானையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். யானைப் பாகன் நத்கர் பாதுஷா, கண்ணீர்விட்டு யானைக்கு பிரியாவிடை கொடுத்தார்
Next Story