இரவில் அதிர்ந்த பூமி.. அச்சத்தோடு விழித்து இருந்த மக்கள் | Krishnagiri | Elephant

x

திசை மாறிச் சென்ற யானைக் கூட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்... ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த நிலையில் நேற்று இரவு பட்டாசுகள் வெடித்து வனத்துறையினர் விரட்டினர். யானை கூட்டம் மரக்கட்டா காப்பு காட்டில் தேன்கனிக் கோட்டை அஞ்செட்டி சாலையை கடக்காமல் திசைமாறி சென்று லக்கசந்திரம் கிராமத்தின் அருகே சாலையை கடந்துள்ளது. 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தாவரக்கரை, அர்த்தகூர் கிராமப் பகுதிகளில் சென்றதால் இரவு நேரத்தில் கிராம மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீண்டும் மரக்கட்டா வழியாக நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்