இறங்குவதற்கு முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்ஓடும் பேருந்திலிருந்து விழுந்த மூதாட்டி
தேக்கம்பட்டியில் இருந்து சேலம் நகரப் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், வீரகனூரை சேர்ந்த மூதாட்டி ஆட்சியரகம் செல்வதற்காக ஏறியுள்ளார். ஆட்சியரகம் அருகேயுள்ள நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது பயணிகள் இறங்கியுள்ளனர். அப்போது மூதாட்டி இறங்குவதை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதையடுத்து, அவர் கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் சக பயணிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Next Story