மயக்க ஊசி செலுத்திய டாக்டர்கள்..! இளைஞர் சிறிது நேரத்தில் திடீர் மரணம்.. சேலத்தில் அதிர்ச்சி
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்தவர் நவீன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வாகனம் இயக்கி விபத்தில் சிக்கிய நிலையில், வலது பக்க தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, அவருடைய உடலில் மருத்துவர்கள் மயக்க ஊசியை செலுத்தியதாக கூறப்படும் நிலையில், மயக்க ஊசி செலுத்திய சிறுது நேரத்திலே நவீன்குமார் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள், இளைஞரின் உடலில் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டதாலயே அவர் உயிரிழந்தார் எனக்கூறி போலீசில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.