பேருந்து நிலையத்தில் தாயை தவிக்கவிட்டு சென்ற மகள் | Chengalpattu
செங்கல்பட்டு அருகே, பாரமாக இருப்பதாக எண்ணி, பெற்ற மகளே வயதான தாயை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாமல்லபுரம-புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூந்தண்டலம் பேருந்து நிறுத்தத்தில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கடந்த 15 நாட்களாக சரியான உணவின்றி, படுத்த படுக்கையாக உடல் நலம் குன்றி காணப்பட்டார். மூதாட்டியின் நிலையைக் கண்டு, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சற்று மன அழுத்தத்துடன் காணப்பட்ட மூதாட்டி, சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த லல்லி என தெரியவந்தது. தன் மகளுடன் சென்னையில் வசித்து வந்ததாகவும், குடும்பத்தில் பாரமாக இருப்பதாக எண்ணிய மகள், தன்னை கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு, இங்கு தன்னை விட்டுவிட்டு சென்றதாகவும் கவலையுடன் தெரிவித்தார். பின்னர் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், முதியோர் இல்லத்தில் அவரை அனுமதிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.