ஓலை பாயில் குழந்தையின் உடல்...ரணமாக்கிய ஒரு தாயின் கண்ணீர்..கையை இழந்த குழந்தை அடக்கம்..

x

ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த தஸ்தகீா் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது தாஹிருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மாதம் குழந்தையின் வலது கையில் 'ட்ரிப்ஸ்' செலுத்தப்பட்டபோது கை கருப்பாக மாறி, அழுகியதால், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தையின் வலது கை மூட்டு பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையே இந்த நிலைக்கு காரணம் என்று பெற்றோர் குற்றச்சாட்டினர். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளித்தது. கடந்த ஒரு மாதமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது தஹிர், எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இதையடுத்து, குழந்தையின் உடல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அடக்கஸ்தலத்தில், மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்