அனைத்து கலெக்டர்களுக்கும் கெடு விதித்த தலைமை செயலாளர்
அனைத்து கலெக்டர்களுக்கும் கெடு விதித்த தலைமை செயலாளர்
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் களையும் வகையில் ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகாரளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை குடிமக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.மேலே குறிப்பிட்ட விரிவான நடவடிக்கைகள் அனைத்தையும் 30.09.2023 க்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும்,இது தொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.