பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி சோதனை | Gold Raid

x

சென்னை பாரிமுனையில், நகைகடையில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் மதியம் ஒரு மணியில் இருந்து இரவு 9 மணி வரை சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது ஹவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரே வாரத்தில், பல்வேறு இடங்களில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்