கைதிக்கு கயிறாக மாறிய சட்டை - சட்டையை கிழித்து காப்பாற்றிய செல்மேட்ஸ்
சேலம் மத்திய சிறைச்சாலையில், தற்கொலைகளை தடுக்கும் வகையில், வாழ்க்கை பாலம் என்ற பெயரில், மனஇயல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்னடத்தை சிறைவாசிகளை கண்டறிந்து தற்கொலை தடுப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், மனநோயால் பாதிக்கப்பட்ட 50 சிறைவாசிகளுக்கு தினமும் காலை யோகா பயிற்சி, மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதி பழனிச்சாமி என்பவர்
திடீரென அடைப்பு கதவிலேயே, தான் அணிந்திருந்த சட்டையின் உதவியால் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதே சிறையில் இருந்த கோகுல்நாதன், பாலமுருகன்,செந்தமிழ்செல்வன் ஆகியோர், காவலருடன் இணைந்து, தற்கொலையை தடுத்தனர். அவர்கள் மூவரையும் கூடுதல் சிறை கண்காணிப்பாளர் வினோத் அழைத்து பாராட்டியதுடன், இனிப்புகளை வழங்கினார். இவர்கள் மூவரும் வாழ்க்கை பாலம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.