ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பஸ்..தட்டிக்கேட்ட மாணவனுக்கு பளார்-தங்கை முன்னே அசிங்கமாக பேசிய நடத்துனர்

x

தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரம் அருகே, பள்ளி மாணவனை அரசு பேருந்து நடத்துனர் தகாத வார்த்தைகளால் திட்டி, அறைந்து, கீழே தள்ளி விட்டதாக புகார் எழுந்துள்ளது. சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சித்தேஷ் குமாரும், மகள் தியாஸ்ரீயும் பள்ளி முடிந்து அடைக்கலப்பட்டணத்தில் இருந்து ஊருக்கு வந்தனர். இருவரையும் நடத்துனர் முருகன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிவகாமிபுரம் வந்த பிறகும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதுடன் மாணவரை நடத்துனர் அறைந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தேஷ் குமார், தனது தந்தையுடன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்