திடீரென பிரிந்து சென்ற மனைவி.. விரக்தியின் உச்சிக்கே சென்ற கணவர் - தந்தையை அடித்தே கொன்ற கொடூரம்

x

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தந்தையை மகன் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை அருகேயுள்ள சாம்பவர் வடகரை சேர்ந்தவர் சக்திவேல். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சக்திவேல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சக்திவேலின் மனநலப் பிரச்சினையால், அவரை அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படும் நிலையில், சில நாட்களாக சக்திவேல் மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். இதனை, சக்திவேலின் தந்தையான கருப்பசாமி கண்டித்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடச் சொல்லி வற்புறுத்திய நிலையில், கருப்பசாமியை சக்திவேல் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது மகன் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்