துணிச்சலாக கேட்ட சிறுவன்..திடீரென விழுந்த அடி..வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினமான இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது... அப்போது பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்... அப்போது

ஐக்கிய ஜனநாயக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவனுக்கும் கேள்வி எழுப்புவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது... திடீரென அதிகாரிகள் முன்னிலையிலேயே ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டனர்... போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், இம்மோதலால் அங்கு பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்