டிராக்டர் கலப்பையில் தவறி சிக்கிய சிறுவன் - உடல் நசுங்கி பலி..வேலூரில் பயங்கரம்
ஒடுகத்தூர் அருகே டிராக்டரின் கலப்பையில் சிக்கி 3-ம் வகுப்பு பள்ளி மாணவன் உடல் நசுங்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சின்ன சேர்பாடியில் விவசாய நிலத்தில் முருகேசன் என்பவர் டிராக்டர் மூலம் ஏர் உழுதுள்ளார். அப்போது விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்த ஊசூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன், டிராக்டரில் அமர ஆசைப்படுவதாக கூறி ஏறி அமர்ந்துள்ளார். டிராக்டர் உழுது கொண்டிருக்கும் போது சிறிது நேரத்தில் கை தவறி பின் சக்கரத்தில் விழுந்த சிறுவன், ஏர் கலப்பையில் சிக்கி உடல் நசுங்கி பலியானான். தகவலின்பேரில் விரைந்த போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி, தப்பியோடிய முருகேசனை தேடி வருகின்றனர்.
Next Story