அதிகாரிகளை ஓட விட்ட ஆட்டோ ஓட்டுநர்..ஒரே நாளில் மாறிய சாலை
அதிகாரிகளை ஓட விட்ட ஆட்டோ ஓட்டுநர்..ஒரே நாளில் மாறிய சாலை
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என தனது ஆட்டோவின் பின்புறம் எழுதிய எதிரொலியால் தார் ஊற்றி சரி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி, மெட்ரோ ரயில், மின் துறை சார்பில் சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இந்த சாலைகளில் அகலம் குறுகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம், 'சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்' என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஆட்டோவின் இது அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.
இது குறித்த செய்தி வெளியான நிலையில், பாலத்தின் உள்ள அனைத்து பள்ளங்களையும் தார் ஊற்றி சரி செய்யப்பட்டது, வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.