பார் ஓனரை வெட்டிக்கொன்ற ஆட்டோ ஒட்டுநர்....தகாத வார்த்தைகளில் திட்டியதால் வெறிச்செயல்...

x

நெல்லை - மயிலப்பபுரம்

நள்ளிரவில் கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்...

6 மாத காத்திருந்து பழிதீர்த்த ஆட்டோ டிரைவர்...

பார் ஓனரை வெட்டிக்கொன்ற ஆட்டோ ஒட்டுநர்....தகாத வார்த்தைகளில் திட்டியதால் வெறிச்செயல்...


தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடுனு வள்ளுவர் சொல்லி இருக்காரு.அது மாதிரி தான் 6 மாசத்துக்கு முன்னாடி ஆத்திரத்தில பேசுன ஒரு தவறான வார்த்த ஆறாம இருந்து இங்க ஒரு உயிரயே பறிச்சி இருக்கு.



மை இருட்டில் மையல் கொண்டிருந்த பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை, அன்று மயானம் போல காட்சியளிக்கிறது.

பூட்ஸ் கால்களின் விறு விறு சத்தமும், காவல் வாகனத்தின் சைரன் ஓசையும், தரையில் உறைந்திருந்த குருதியும் அந்த இடத்தை மேலும் பற்றி எரிய வைத்தது.

இவை அனைத்திற்கும் காரணம், மருத்துவமனையில் ரத்தக்காயங்களுடன் கிடக்கும் இந்த ஆண் சடலம்.

நடந்திருப்பது ஒரு படுகொலை..... கொல்லப்பட்டவர் நெல்லை மாவட்டம் மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை ராஜூ. 52 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

பிச்சை ராஜூ அதிமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். நெல்லை மாநகராட்சியின் 18 ஆவது வார்டு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசியல் களத்தில் முக்கிய நபராக கருதப்படும் பிச்சை ராஜூவுக்கு ஏரியா மக்கள் வைத்த பெயர் பார் ஓனர்.

சம்பவம் நடந்த அன்று இரவு, வழக்கம் போல பாரில் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் பிச்சை ராஜூ. அப்போது பேட்டை வீரபாகுநகர் ரயில்வே சுரங்கத்திற்குள் நுழைந்த பிச்சை ராஜூவை, ஒரு மர்ம கும்பல் வழி மறித்திருக்கிறது.

யார் அவர்கள்...? என்ன நடக்கிறது...? என்று சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் பிச்சை ராஜூவை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றிருக்கிறது.

இரத்த வெள்ளத்தில் குத்துயிரும் குலையுயிருமாக கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பிச்சை ராஜூ வழியிலேயே பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடையங்களை மீட்டு கொலைக்கான காரணத்தை தேடி விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

அதில் பிச்சை ராஜூ முன் விரோதத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. உடனே அந்த கோணத்தில் விரித்த விசாரனை வலையத்தில், வெங்குபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டி மற்றும் அவரது நண்பர் நம்பி துரையை போலீசார் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் போலீசாரின் சந்தேகம் ஊர்ஜிதமாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுனரான பாண்டி, வடிவேலுவை போல 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என சொல்லி பிச்சை ராஜூவின் பாரில் ஐக்கியமாகி விடுவாராம்.

அப்படித்தான் கடந்த 6 மாதத்திற்கு முன் ஒரு நாள், 6 மணி ஆனதும் மது வா வா என பாண்டியை அழைக்க, உடனே பாருக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அன்றைய தினமோ சரக்கு வாங்க வந்த குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது.

அனைவரும் வரிசையில் வந்து மது வாங்கி இருக்கிறார்கள். கியூவில் வந்து குடிப்பதற்கெல்லாம் பொறுமை இல்லாத பாண்டி, அங்கிருந்தவர்களை அடித்து தள்ளிவிட்டு கம்பி ஜன்னல் வழியாக 130 ரூபாயை நீட்டி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த சக குடிமகன்கள், பாண்டியிடம் தகராறு செய்திருக்கிறார்கள். சலசலப்பை கேட்டு அதிர்ந்து போன பிச்சை ராஜூ, சண்டைக்கு காரணமான பாண்டியை அனைவரின் முன்னிலையும் வைத்து தகாத வார்த்தைகளால் பேசி பாரை விட்டு விரட்டி இருக்கிறார்.

அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், பாண்டியின் மனதில் ஆறு மாதமாக குடிகொண்டு ஆறாத ரணத்தை உருவாக்கி உள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்திய பிச்சையை பீஸ் பீஸாக நினைத்த பாண்டி, அவரது நண்பர் நம்பி துரையுடன் களத்தில் இறங்கி கொலை செய்திருக்கிறார்.

விசாரனையின் முடிவில் பாண்டி மற்றும் நம்பி துரை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்